/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா கலை, அறிவியல் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
சோனா கலை, அறிவியல் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சோனா கலை, அறிவியல் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சோனா கலை, அறிவியல் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 03, 2025 01:52 AM
சோனா கலை, அறிவியல் கல்லுாரியில்8ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
சேலம்:சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 8ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர்.
முதல்வர் காதர் நவாஸ் அனைவரையும் வரவேற்று, மாணவர்களின் சாதனைகள் அடங்கிய படத்தொகுப்புடன் கூடிய ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் சந்தானகிருஷ்ணன், 'ஜெம் ஹப்' சி.இ.ஓ., ஜனார்தனன் வெங்கடேசன் பேசினர்.
கல்வியில் முதலிடம் பெற்றவர்கள், கல்வியில் முன்னிலை வகித்து படித்து முடித்து வெளியேறிய சிறந்த மாணவர்கள், விளையாட்டுத்துறையில் அசத்தியவர்கள்,
மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறந்த நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள், தேசிய மாணவர் படை மாணவர்கள், சிறந்த தமிழ், ஆங்கில பேச்சாளர்கள், தொடர்ந்து நுாலகத்தை நன்முறையில் பயன்படுத்தியவர்கள், பொருளாராதார அளவில் பின் தங்கியவர்கள் என, 15,00,000 ரூபாய், கல்லுாரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டன.
விழாவில் கல்லுாரி இயக்குனர் கார்த்திகேயன், சோனா கல்வி குழும முதல்வர்கள் கனகராஜ், செந்தில்குமார், கவிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். காட்சி தொடர்பியல் துறைத்தலைவி சாந்தி நன்றி தெரிவித்தார்.