ADDED : ஜூலை 08, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார் : காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி யில் இருந்து பயணிய-ருடன் நேற்று அரசு டவுன் பஸ் புறப்பட்டது. ராமர் என்பவர் ஓட்-டினார். மாலை, 6:00 மணிக்கு செம்மாண்டப்பட்டி வழியே, வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக டாரஸ் லாரி வந்தது. இதனால் டிரைவர் இடதுபுறத்தில் பஸ்சை ஓட்டினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணியர் உள்-ளிட்ட அனைவரும் காயமின்றி தப்பினர். மின்கம்பம் இரண்டாக உடைந்தது. பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமானது. ஓமலுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.