/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வலிப்பால் கிணற்றில் விழுந்த கட்டட மேஸ்திரி பலி
/
வலிப்பால் கிணற்றில் விழுந்த கட்டட மேஸ்திரி பலி
ADDED : செப் 12, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம், பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்தார். இவருக்கு
மனைவி சரஸ்வதி, 35, ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று காலை, 11:00 மணிக்கு வீடு அருகே உள்ள பொது கிணற்று திட்டின் மீது
செந்தில்குமார் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தவறி கிணற்றில் விழுந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்,
ஓமலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 10 நிமிடத்தில் அங்கு வந்த வீரர்கள், அரை மணி நேரம் தேடி, கயிறு மூலம்
செந்தில்குமாரை சடலமாக மீட்டனர். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

