/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பதிவு தபாலை வாங்காத உறுப்பினர்கள் பைத்துார் ஊராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ADDED : ஆக 07, 2024 01:56 AM
ஆத்துார், ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி தலைவி கலைச்செல்வி, 50. தி.மு.க.,வை சேர்ந்த இவர், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. 2023 டிச., 20ல், அப்போதைய சேலம் கலெக்டர், கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்தார். இதுதொடர்பாக கலைச்செல்வி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு பின், கலெக்டரின் உத்தரவை அமல்படுத்த, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை, 29ல், கலைச்செல்வியை பதவி நீக்கி கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து துணைத்தலைவர் சந்திரசேகரிடம், தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தில் தலைவர், துணைத்தலைவர் கையெழுத்திட வேண்டும். தற்போது துணைத்தலைவர், தலைவர் பொறுப்பு வகிப்பதால் மற்றொருவரை உப தலைவராக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு கூட்டம் நடத்த, தலைவர் சந்திரசேகர்(பொ), 11 உறுப்பினர்களுக்கு தபால் அனுப்பினார். இதில் தினகரன், சரோஜா, பதிவு தபாலை வாங்கவில்லை. இதனால் நேற்று நடக்கவிருந்த கூட்டம், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக, ஆத்துார் பி.டி.ஓ., செந்தில் அறிவித்தார்.