ADDED : ஆக 19, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் ரோட்டரி சமுதாய குழும, 2024 - 25ம் ஆண்டின் புது நிர்வாகிகள் பொறுப்-பேற்பு விழா நேற்று நடந்தது. தலைவராக தென்-னரசு, செயலராக நரசிம்மன், பொருளாளராக நாகராஜ் பொறுப்பேற்றனர்.
தொடர்ந்து ரோட்டரி கவர்னர் செந்தில்குமார், உதவி கவர்னர் பிள்ளைமனோஜ் சிவசங்கர், சேலம் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தலைவர் பொன்னுசாமி, செயலர் விஜய்சதாசிவம், ஒருங்-கிணைப்பாளர் குமரேஷ், மக்களுக்கு தேவை-யான திட்டங்களை தேர்வு செய்து செயல்படுத்து-வது குறித்து அறிவுறுத்தினர்.
மேலும் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்-ளியில், தமிழ், ஆங்கில வழியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்-களை பிடித்த, மாணவ, மாணவியருக்கு கை கடி-காரம் பரிசாக வழங்கப்பட்டன.