/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளி சிரமமின்றி மனு வழங்க ஏற்பாடு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
/
மாற்றுத்திறனாளி சிரமமின்றி மனு வழங்க ஏற்பாடு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
மாற்றுத்திறனாளி சிரமமின்றி மனு வழங்க ஏற்பாடு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
மாற்றுத்திறனாளி சிரமமின்றி மனு வழங்க ஏற்பாடு செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
ADDED : ஜூலை 06, 2024 06:53 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்-பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வேளாண், உழவர் நலத்துறை சிறப்பு செயலர் சங்கர், நேற்று ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டியில், 8 கோடி ரூபாய் மதிப்பில் அழகாபுரம் முருகன் கோவிலில் தொடங்கி ஆலமரத்துக்காடு வரை, 1.6 கி.மீ.,க்கு கழிவுநீர் கால்வாய்; சீர்மிகு நகர திட்-டத்தில், 14.01 கோடி ரூபாயில் பள்ளப்பட்டி ஏரி புனரமைத்து அழகுபடுத்தல்; ரெட்டியூரில், 6 லட்சத்தில், கூடுதல் துணை சுகா-தார மையம், மல்லமூப்பம்பட்டியில் கனவு இல்ல திட்டத்தில், 3.50 லட்சத்தில் வீடுகள், அங்குள்ள ஒன்றிய தொடக்கப்பள்-ளியில், 27.63 லட்சத்தில் இரு வகுப்பறை உள்பட, 34.83 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அனைத்து துறை அதிகாரிகளுடன், கலெக்டர் அலுவ-லகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சங்கர் பேசுகையில், ''மக்க-ளுடன் முதல்வர் திட்ட முகாம், 2ம் கட்டமாக வரும், 11ல் நடக்க உள்ளது. அதில் மனுக்களை பதிவு செய்ய இணையதள வசதி, கணினி, பிரின்டர் உள்ளிட்டவை போதிய அளவில் அமைக்கப்படும். மக்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மனுக்கள் வழங்க, அனைத்து வசதிகள் மேற்கொள்ள அறிவுறுத்-தப்பட்டுள்ளது. வரும், 15ல் முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்வதால் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்-ளது,'' என்றார்.
இதில் கலெக்டர் பிருந்தாதேவி உள்பட பலர்
பங்கேற்றனர்.