/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் தடையில்லா சான்றை அள்ளித்தரும் அதிகாரி வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு
/
சேலத்தில் தடையில்லா சான்றை அள்ளித்தரும் அதிகாரி வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு
சேலத்தில் தடையில்லா சான்றை அள்ளித்தரும் அதிகாரி வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு
சேலத்தில் தடையில்லா சான்றை அள்ளித்தரும் அதிகாரி வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 23, 2024 01:08 AM
சேலம் : தடையில்லா சான்றிதழை வாரி வழங்கும் அதிகாரியால், சேலம் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்கள், வீட்டுமனைக-ளாக மாறி வருவதாக, விவசாயிகள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
நிலத்தை வீட்டு மனையாக மாற்ற, வருவாய்த்துறை ஆவ-ணத்தில், 'வறண்ட நிலம்' என பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் நீரோடை, கண்மாய் போன்ற நீர்நிலைகள் எதுவும் அந்த நிலத்தை சுற்றி இருக்கக்கூடாது. குறிப்பாக விவசா-யத்துக்கு தகுதியற்ற நிலம் என உறுதி செய்தால் மட்டுமே, 'தடை-யில்லா சான்றிதழ்' வழங்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், இதுபோன்ற விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களுக்கு வறண்ட நிலம் என, தடையில்லா சான்றிதழ் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்-துள்ளது.
திருச்சி அருகே மண்ணச்சநல்லுாரை சேர்ந்தவர் சிங்காரம். இவர்
சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணிபுரிகிறார். இவர் பெரும்பாலான நாட்களில் இரவில் அலுவலகத்திலேயே தங்குவதும்,
அப்போது ரியல் எஸ்டேட் அதிபர்களை வரவழைத்து பேசுவது, அவர்கள்
கூறும் இடத்துக்கு மறுநாளே, 'விசிட்' அடித்து தடையில்லா சான்-றிதழ் வழங்குவதில் தனி கவனம் செலுத்தி, 'வளம்' கொழிப்பதா-கவும், இவர் பதவி காலத்தில் தான், சேலம் மாவட்டத்தில் மிக அதிக அளவு இடம், தகுதியற்ற நிலம் என, தடையில்லா சான்-றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி விவசாயி வெற்றி-மணி: வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் மீது பல்வேறு முறைகேடு தொடர்பாக, மத்திய வேளாண் அமைச்சகம், முதல்வர் தனி பிரிவு என, 20க்கும் மேற்பட்ட இடத்துக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு மனு விஜிலென்சுக்கு பரிந்து-ரைக்கப்பட்டதாக தகவல் வந்தது. ஆனாலும்
நடவடிக்கை இல்லை. அவர் பதவியேற்ற பின், தகுதியற்ற நிலம் என தகுதி சான்றிதழ் வழங்கிய விபரத்தை வெளியிட்டாலே, அவரது மோசடி அம்பலமாகும். இதுதொடர்பாக தனி அதிகா-ரியை நியமித்து முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
ஐக்கிய விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலர் சரவணன்: ஆத்துார், காட்டுக்கோட்டை வடக்கு பகுதி, வளம் கொழிக்கும் பூமி. மரவள்ளி, மஞ்சள், கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் நிலப்-பகுதிக்கு நடுவே, 15 ஏக்கரில் சேகோ ஆலை நிறுவ, 2022ல் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறோம். முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அனுப்பிய பின்பே, இணை இயக்குனர் சிங்காரம், இடத்தை ஆய்வு செய்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லை. அனுமதி ரத்து செய்யும் வரை போராடுவோம்.
சேலம் மாவட்ட விவசாயிகள் நலச்சங்க தலைவர் கோவிந்-தராஜ்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் தோட்டக்கலைத்துறையை போன்று வேளாண் துறையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இட-மாற்றம் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் குறைந்தது, 7 ஆண்டு முதல், ஒரே இடத்தில் பணிபுரிவதால் விவசாயிகளை மதிப்பதில்லை. குறைதீர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை. இதனால் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் மத்-தியில் மோதல் போக்கு உச்சத்தில் உள்ளது.
சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம்: அலு-வலகத்தில் தங்குவது உண்மை. மற்றபடி என் மீது பொய் தக-வலை கூறுகின்றனர். அதை பெரிதுபடுத்த
வேண்டாம்.