/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 18 மாதத்துக்கு பின் பஸ்கள் இயக்கம்

ADDED : பிப் 25, 2025 06:50 AM
மேட்டூர்: மேட்டூரில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் இருந்து, 18 மாதங்களுக்கு பின்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேட்டூரில் கடந்த, 1992ல் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டில் கடைகள், நடைமேடை பலவீனம் அடைந்தது. இதனால், 2023 ஆக.,16ல் பஸ் ஸ்டாண்ட் தற்காலிகமாக எதிர்புறம் உள்ள மின்க-ழக நிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த, 18 மாதங்களில், 6.40 கோடி ரூபாய் செலவில், 69 கடைகள், நடைமேடை, சுகாதார வளாகம், டூவீலர் நிறுத்துமிடத்துடன் கூடிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
அதனை கடந்த, 22ல் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்து சேலம், தர்மபுரிக்கு பஸ்களை அனுப்பி வைத்தனர்.விழாவுக்கு பின்பு பந்தல் அகற்றும் பணி முடிந்ததால், 18 மாதங்-களுக்கு பின்பு நேற்று காலை, 5:00 மணி முதல் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் தொலைதுார, நகர பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட, 69 கடைகள் இன்னமும் ஏலம் விடவில்லை. விரைவில் ஏலம் விட்டு, கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.