/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு
/
எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு
எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு
எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 02, 2024 06:59 AM
ஆத்துார் : ஆத்துார், மந்தைவெளி ரயில்வே பாலம் பகுதியில் சிலர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆத்துார் டவுன் எஸ்.எஸ்.ஐ., பரமசிவம், ஏட்டு ராஜ்மோகன் ஆகியோர் பைக்கில் சென்று, சாலையில் நின்றிருந்த நபர்களை செல்லும்படி கூறினர். சிலர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்த-போது, வாலிபர்கள் நிறுத்தி வைத்திருந்த பைக் சாவியை, போலீசார் எடுத்துள்ளனர். அப்போது, அங்கிருந்த நபர்கள் போலீ-சாரின் பைக்கில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு, தகாத வார்த்தையில் திட்டி, உருட்டு கட்டையை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஏட்டு, பைக் எடுத்துச் செல்ல முடியாமல் நடந்து சென்றுள்ளனர். அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த நபர்கள், தகராறு செய்து போலீஸ் பைக் சாவியை எடுத்த நபர்க-ளிடம், சாவியை வாங்கிக் கொடுத்தனர்.
இதுகுறித்து, எஸ்.எஸ்.ஐ., பரமசிவம் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், மந்தைவெளி சந்தோஷ், சதீஷ், கிருபா, பாரதி, மணி, பரத், சேது ஆகிய ஏழு பேர் மீது, தகாத வார்த்தையில் திட்டுதல், அரசு பணியை தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில், நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சந்தோஷ், 23, என்பவரை கைது செய்தனர். தலைமறை-வான மற்ற ஆறு பேரையும், போலீசார் தேடிவருகின்றனர்.