/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிடிபட்ட புகையிலை விற்பனை எஸ்.ஐ., உள்பட 3 பேர் மாற்றம்
/
பிடிபட்ட புகையிலை விற்பனை எஸ்.ஐ., உள்பட 3 பேர் மாற்றம்
பிடிபட்ட புகையிலை விற்பனை எஸ்.ஐ., உள்பட 3 பேர் மாற்றம்
பிடிபட்ட புகையிலை விற்பனை எஸ்.ஐ., உள்பட 3 பேர் மாற்றம்
ADDED : ஜூலை 22, 2024 07:07 AM
இடைப்பாடி : சேலம் மாவட்டம் இடைப்பாடியில், எஸ்.ஐ., அய்யப்பன், முதல் நிலை போலீசார் ராஜா, குணசேகரன் ஆகியோர், நேற்று முன்-தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புகையிலை பொருட்களை பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் ராஜா, குணசேகரன் ஆகியோர், இடைப்பாடி புறவழிச்சாலையில் உள்ள சவுந்தரி என்பவர் பெட்-டிகடையில் ஆய்வு செய்தனர்.
கடையில், 20 கிலோ அளவில், 2 மூட்டை புகையிலை இருந்-தது. ஆனால், 2 கிலோ புகையிலை இருந்ததாக, இரு போலீ-சாரும் தெரிவித்துள்ளனர். இதனால் சவுந்தரி மீது வழக்கு மட்டும் பதிந்து, எஸ்.ஐ., அய்யப்பன், அப்பெண்ணை ஜாமினில் விடுவித்தார்.
தொடர்ந்து மற்றொரு இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் வந்த ஒருவர், 2 மூட்டை புகையிலை பொருட்களை கொண்டு வந்துள்ளார். அதை போலீசார் பிடித்-தனர். அப்போது அந்த நபர், போலீஸ்காரர்கள் ராஜா, குணசேகர-னிடம், விலைக்கு வாங்கியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சேலம் எஸ்.பி., அருண்கபிலனுக்கு தகவல் கொடுக்-கப்பட்டது. பின் ராஜா, குணசேகரனை, ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.
தொடர்ந்து, போலீசாருடன் ஆய்வுக்கு செல்லாமல் இருந்த கார-ணத்துக்கு, எஸ்.ஐ., அய்யப்பனையும் ஆயுதப்
படைக்கு மாற்றி, எஸ்.பி.,
உத்தரவிட்டார்.