ADDED : ஜூலை 04, 2024 07:27 AM
சேலம், : சேலம், அம்மாபேட்டை வைத்தி உடையார்காட்டை சேர்ந்தவர் நேதாஜிகுமார். ஜவுளி கடையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களது பெண் குழந்தை, 10 மாதமேயான இனன்யா. கடந்த, 1ல் அதே பகுதியில் உள்ள தாய் கலைச்-செல்வி வீட்டில் நந்தினி, குழந்தையை விட்டார்.
அன்று கலைச்செல்வி, எலக்ட்ரிக் தையல் இயந்திரத்தில் பணிபு-ரிந்து கொண்டிருந்தார். மாலை, 5:00 மணிக்கு, இயந்திர மின்ஒ-யரை இனன்யா இழுக்க, மின்சாரம் பாய்ந்தது. இதில் பாடுகாயம-டைந்த குழந்தையை, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ-மனையில் சேர்த்தனர். ஆனால் இரவு, 7:20க்கு குழந்தை உயிரி-ழந்தது. நந்தினி நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, அம்மா-பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கொத்தனார்
அதேபோல் சேலம், பொன்னம்மாபேட்டை, சிங்காரப்பேட்டை வாசகசாலை தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம், 57. கொத்தனா-ரான இவர் நேற்று முன்தினம், கிச்சிப்பாளையம், மக்கான் தெருவில் உள்ள குமரேசன் ரெசிடென்சியில் பணியில் ஈடு-பட்டார். அப்போது அவர், கட்டுமான பணிக்கு ஈரக்கயிற்றின் ஒரு முனையை, முதல் மாடியில் இருந்து, 2ம் மாடிக்கு வீசினார். அப்போது ஈரக்கயிறு தெருவில் இருந்த மின்கம்பியில் பட, மின்-சாரம் பாய்ந்து தர்மலிங்கம் மயங்கி விழுந்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் உயி-ரிழந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.