ADDED : செப் 08, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அனல், புனல், காற்றாலை, மத்திய மின் தொகுப்பு மூலம், 19,064 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்-யலாம். இதில் தமிழக காற்றாலைகள் மூலம், 9,115 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். நேற்று முன்தினம் தமிழக காற்-றாலை மின் உற்பத்தி, 4,158 மெகாவாட் ஆக இருந்த நிலையில் நேற்று காற்றின் வேகம் குறைய, காற்றாலை மின் உற்பத்தி, 2,565 மெகாவாட் ஆக சரிந்தது.
நேற்று முன்தினம், 17,521 மெகாவாட் ஆக இருந்த தமிழக மின் நுகர்வு, அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்று, 15,278
மெகாவாட் ஆக சரிந்தது.