/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2.62 லட்சம் குழந்தைகளுக்கு 'ஏ' சொட்டு மருந்து வழங்கல்
/
2.62 லட்சம் குழந்தைகளுக்கு 'ஏ' சொட்டு மருந்து வழங்கல்
2.62 லட்சம் குழந்தைகளுக்கு 'ஏ' சொட்டு மருந்து வழங்கல்
2.62 லட்சம் குழந்தைகளுக்கு 'ஏ' சொட்டு மருந்து வழங்கல்
ADDED : ஜூலை 02, 2024 05:20 AM
சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் ஆகியோர், குழந்தைகளுக்கு 'ஏ' சொட்டு மருந்து திரவம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தனர். அதன்பின், பிருந்தாதேவி கூறியதாவது:
குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் வரும், 31 வரை நடக்கிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் முகாம் நடக்கிறது. வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீர்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகும். நீர்சத்து குறைபாடு போக்க உப்புநீர் கரைசல் எனும் உயிர்காக்கும் அமுதம் அளிப்பதால், இறப்பை தடுத்து விடலாம்.
கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் வீடு தேடி சென்று, 5 வயது குழந்தைகளுக்கு உப்புநீர் கரைசல் துாள் பாக்கெட், 14 நாட்களுக்கான துத்தநாக மாத்திரைகளை இலவசமாக வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வைட்டமின் 'ஏ' உயிர்சத்து, ஆரோக்கியமான கண்பார்வைக்கு முக்கிய பங்களிப்பதுடன், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, தோல் திசு, எலும்பு வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்தாக உள்ளது.
தேசிய அளவில் ஆறு மாதத்துக்கு ஒருமுறை வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மூலம், 5 வயதுக்கு உட்பட்ட, 2,62,674 குழந்தைகள் பயன்பெறுவர்.
இவ்வாறு கூறினார்.