/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிற்சாலையில் தீ 3 தொழிலாளர் படுகாயம்
/
தொழிற்சாலையில் தீ 3 தொழிலாளர் படுகாயம்
ADDED : ஜூலை 06, 2024 06:57 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே வேதநாயகபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 53. அதே பகுதியில் கோலியாஸ், மஞ்சளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். அங்கு பீஹாரை சேர்ந்தவர்கள் உள்பட, 25 பேர் பணிபுரிகின்றனர். நேற்று, பாய்-லரில் விறகு போடும் பணியில், 5 தொழிலாளர்கள்
ஈடுபட்டனர்.
அப்போது விறகின் மீது பிரித்தெடுத்த கழிவு எண்ணெயை ஊற்ற, அதிகளவில் தீ பரவியது. இதில் பீஹாரை சேர்ந்த, ராஜேஷ், 30, மிதுன்குமார், 25, மட்டுமின்றி பெரம்பலுார், நுாத்-தப்பூரை சேர்ந்த அரவிந்த், 30, ஆகியோர் மீது தீ பட்டு படுகாய-மடைந்தனர். இவர்கள் ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்-றனர்.