sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணிமுத்தாறு கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேதனை

/

திருமணிமுத்தாறு கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேதனை

திருமணிமுத்தாறு கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேதனை

திருமணிமுத்தாறு கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு குறைதீர் கூட்டத்தில் விவசாயி வேதனை


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட அளவில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:

செல்வராஜ்: சேலம் மாநகராட்சி, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்-யாமல் அப்படியே திருமணிமுத்தாறில் வெளியேற்றுதால் அதை சார்ந்துள்ள வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, காகாபாளையம், மல்-லசமுத்திரம் பகுதி விளைநிலங்களில்

உப்புத்தன்மை அதிகமாகி மண்வளம் அழிந்து சோளம், தென்னை தவிர, இதர பயிர்கள் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்-துடன் திருமணிமுத்தாறில் ஆண்டுக்கு 3 டி.எம்.சி., மழைநீரும் சாக்கடை நீராக

மாறிவிடுவதால் அதை தடுக்க நடவடிக்கை தேவை.சிவக்குமார்: ஆத்துார் புறநகர் பகுதிகளில் காலை, 5:00 முதல், 9:00 மணி வரை, இருமுனை மின் இணைப்பு வழங்குவதால் விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. பகலில் வினி-யோகிப்பதால் விவசாயிகள் பல்வேறு

சிரமங்களுக்கு ஆளாகின்-றனர். அதனால் காலையில் மும்முனை மின்சாரம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராமன்: மாவட்டத்தில், 6.86 லட்சம் எருமை, பசுக்களில், 3,000 கால்நடைகளுக்கு மட்டும் காப்பீடு அனுமதிக்கப்பட்டுள்-ளது. அதனால் காப்பீடு பெறும் கால்நடைகளின் எண்ணிக்-கையை அதிகப்படுத்தி, பாலிசி தொகை

முரண்பாடுகளை களைய வேண்டும். தலைவாசலில் இருப்பதை போன்று உத்தம-சோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்த காய்கறி சந்தை தொடங்க வேண்டும். கோவிந்தன்: மணிவிழுந்தான் அணைக்கட்டு கால்வாயில் சீமைக்-கருவேல மரங்கள் முளைத்து துார்ந்துவிட்டதால் கால்வாய் நீர் தலைவாசல் ஏரிக்கு வருவது தடைபட்டுவிட்டது. அதனால் அணைக்கட்டு கால்வாயில் துார்வார

வேண்டும். மேலும் புத்துார் ஏரி, ஆயர்பாடி கசிவுநீர் குட்டையில் வண்டல் மண் அள்ள அனு-மதிக்க வேண்டும்.சண்முகம்: இடைப்பாடி பகுதிகளில் தற்போது அதிகளவில் சாகு-படி ஆகும் மரவள்ளிக்கு டன் விலை, 4,000 முதல், 6,500 ரூபாய் மட்டும் கிடைப்பதால் நஷ்டத்தை தடுக்க, டன், 10,000 ரூபாய் என விலை நிர்ணயிக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பரிசீலனை செய்து நடவ-டிக்கை எடுப்பதாக, கலெக்டர் பதில் அளித்தார்.






      Dinamalar
      Follow us