/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 07:36 AM
சேலம், : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.
அதில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், தி.மு.க., நிறைவேற்றுதல்; 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்-பட்ட சரண்டர் லீவு உள்ளிட்ட உரிமைகளை உடனே வழங்-குதல்; வரையறுக்கப்பட்ட, 3.50 லட்சம் ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்-கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ராணி, இணை செயலர் திருநாவுக்கரசு வட்ட கிளை தலைவர் முருகபெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் வட்ட கிளை தலைவர் சுந்தர்ராஜன்; ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், வட்ட தலைவர் சீனிவாசன்; ஏற்காட்டில் வட்ட செயலர் செல்வ-குமார், வாழப்பாடியில் மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலை-மை என, மாவட்டம் முழுதும், 14 தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.