sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் வருவாய் கோட்டத்தில் 6 இடங்களில் சிலை கரைக்கலாம்

/

மேட்டூர் வருவாய் கோட்டத்தில் 6 இடங்களில் சிலை கரைக்கலாம்

மேட்டூர் வருவாய் கோட்டத்தில் 6 இடங்களில் சிலை கரைக்கலாம்

மேட்டூர் வருவாய் கோட்டத்தில் 6 இடங்களில் சிலை கரைக்கலாம்


ADDED : செப் 07, 2024 08:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து மேட்டூர் வருவாய் கோட்டமான மேட்டூர், ஓமலுார், காடையாம்-பட்டி வட்டங்களில், இன்று முதல், 9 வரை சிலைகளை நீர்நிலை-களில் கரைக்க, வருவாய்த்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்-படி மேட்டூர் வட்டத்தில் காவியாற்றில் காவிரி பாலம் படித்-துறை; எம்.ஜி.ஆர்., பாலம் படித்துறை; மேட்டூர் அணை நீர்ப-ரப்பு பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அருகே; திப்பம்-பட்டி, கூனாண்டியூர் என, 5 இடங்களில் அனுமதி வழங்கப்பட்-டுள்ளது. காடையாம்பட்டி வட்டத்தில் டேனிஷ்பேட்டை ஏரியில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சிலைகளை கரைக்க தடை விதிக்கப்பட்ட மேட்டூர் அணை கோட்டையூர், பண்ணவாடி, மூலக்காடு, காவிரி ஆற்றின் மட்டம் பகுதியை, மேட்டூர் தாசில்தார் ரமேஷ் நேற்று பார்வை-யிட்டார். மதியம் சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், மேட்டூர் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் உள்ளிட்ட போலீசார், காவிரி பாலம் பகுதியை பார்வையிட்டனர்.

தடுப்புகள் அமைப்பு

வழக்கமாக பக்தர்கள் விநாயகர் சிலைகளை மேட்டூர் அணை நீர்-பரப்பு பகுதி, காவிரியாறு, மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் கரைப்பர். அதை நடப்பாண்டு தடுக்க, மேட்டூர் அணை சின்ன-மேட்டூர், மேட்டூர் மட்டம் படித்துறை, பண்ணவாடி, கோட்-டையூர் பகுதிகளில் கம்பங்கள் மூலம் தடுப்புகள் அமைத்து பாது-காப்பு பணியில் ஈடுபட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us