/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் தொலைநிலை கல்வி மையத்தில் பல்கலை மானிய குழு ஆய்வு பணி துவக்கம்
/
பெரியார் தொலைநிலை கல்வி மையத்தில் பல்கலை மானிய குழு ஆய்வு பணி துவக்கம்
பெரியார் தொலைநிலை கல்வி மையத்தில் பல்கலை மானிய குழு ஆய்வு பணி துவக்கம்
பெரியார் தொலைநிலை கல்வி மையத்தில் பல்கலை மானிய குழு ஆய்வு பணி துவக்கம்
ADDED : செப் 10, 2024 07:04 AM
ஓமலுார்: பெரியார் பல்கலை தொலைநிலை கல்வி மையத்தில், பல்கலை மானிய குழுவினர் ஆய்வு பணி துவங்கியது.
சேலம் பெரியார் பல்கலையில் இயங்கி வந்த, பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில், கல்வி கட்டணம் அதிகம் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், கடந்த, 2022-24 மே மாதம் வரை, பெரியார் தொலை நிலைக்-கல்வி நிறுவனம் இரண்டு ஆண்டுகள் செயல்பட கூடாது என, பல்கலை மானியக்குழு தடை விதித்தது. தடைகாலம் முடிந்-ததால், மீண்டும் தொலைநிலைக்கல்வி மையம் செயல்படுத்த, துறை சார்பில்
பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொலைநிலைக் கல்வியில், பி.ஏ.,தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.ஏ.,ஆங்கிலம், எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி.கணிதம், எம்.சி.ஏ., ஆகிய பாடங்கள் நடத்திடவும், விதிக்கப்பட்ட தடையை நீக்க
கோரியும், பல்கலை மானிய குழுவுக்கு, பெரியார் தொலைநிலைக்கல்வி மையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, தொலை நிலைக்கல்வி மையத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக, மூன்று நாள் ஆய்வு பணியை
மேற்கொள்ள பல்கலை மானியக்குழு-வினர் நேற்று காலை பெரியார் பல்கலைக்கு வந்தனர்.ஆய்வுக்குழு சேர்மன் பேராசிரியர் நாகேஸ்வர் ராவ் தலை-மையில், உறுப்பினர்கள் பாலாஜி, ஸ்ரீதர் சிம்மலகொண்டா, வினோத் சிங் யாதவ் ஆகியோர், 'சிண்டிகேட்' அறையில் துணை-வேந்தர் ஜெகநாதனுடன் ஆலோசனை
நடத்தினர். மதியம், அலு-வலர்களுடன் 'செனட்' அறையில் ஆலோசனை நடத்தினர். இன்றும், நாளையும் துறையில் ஆய்வு நடத்த உள்ளனர்.அனுமதி கூடாது...
தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சுரேஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் பெரியார் பல்கலையில் நடத்தப்பட்ட தொலைநிலைக் கல்வி பாடப்பிரிவுக்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, இரண்டு ஆண்டுகள் தொலைநிலைக்கல்-வியை தொடர, பல்கலை மானிய குழு
தடை விதித்தது. பெரியார் பல்கலை மேல்முறையீட்டின் அடிப்படையில், பல்-கலை மானிய குழு மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். தொலைநிலைக்கல்விக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணி-யாளர்கள் தேர்வு
செய்யப்படாத நிலையில், பல்கலையில் பணி-யாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை, தொலைநிலை கல்வி மையத்தில் பணிபுரிவதாக தவறாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.கருத்தரங்கு அறை, ஆய்வக அறை என தொலைநிலைக் கல்-விக்கென தனியான கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே ஆய்வு செய்ய வரும் பல்கலை மானிய குழுவினர், பெரியார் தொலைநிலைக் கல்வி சேவையை தொடர
அனுமதி வழங்க கூடாது.இவ்வாறு கூறியுள்ளார்.

