/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதிகளின் மளிகை பொருளில் முறைகேடு ஆத்துார் சிறை துணை அலுவலர் 'சஸ்பெண்ட்'

ADDED : ஆக 26, 2024 02:57 AM
ஆத்துார்: ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்-ளது. இங்கு, 40க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்-கான உணவு வழங்க, கூட்டுறவுத்துறையில் இருந்து அரிசி, மளிகை பொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் மளிகை பொருட்கள் தரமில்லை என்றும், மீதியாகும் பொருட்-களை, வெளி மார்க்கெட்டில் விற்பதாகவும் புகார் எழுந்தது.
இதனால் சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத், விஜிலன்ஸ் போலீசார், ஒரு வாரத்துக்கு முன் ஆத்துார் சிறையில் ஆய்வு செய்-தனர். அப்போது கணக்கில் இல்லாத, 18 கிலோ துவரம் பருப்பு உள்பட, 23 வகை மளிகை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் தருமாறு, துணை சிறை அலுவலர் வைஜெயந்திக்கு, எஸ்.பி., நோட்டீஸ் வழங்கினார். சிறைத்-துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளுக்கும் விசாரணை அறிக்-கையை அனுப்பி
வைத்தார்.
இதை தொடர்ந்து துணை சிறை அலுவலர் வைஜெயந்தியை, 'சஸ்பெண்ட்' செய்து, சிறைத்துறை டி.ஜி.பி., நேற்று உத்தர-விட்டார். உதவி சிறை அலுவலர் ஒலிமுத்துவுக்கு, துணை சிறை அலுவலர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.