/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இன்று செயல்படும்
/
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இன்று செயல்படும்
ADDED : செப் 17, 2024 01:35 AM
குரும்பப்பட்டி உயிரியல்
பூங்கா இன்று செயல்படும்
சேலம், செப். 17-
மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இன்று செயல்படும்.
ஏற்காடு மலை அடிவார பகுதியில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புள்ளிமான், கடமான், முதலை, வண்ண வண்ண பறவைகள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் உள்ளன. இதனை வனத்துறை பராமரித்து வருகிறது.
ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குரும்பப்பட்டி பூங்காவிற்கு வருகின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அன்றைய தினம் பூங்கா பராமரிப்பு பணிகளை, வன ஊழியர்கள் மேற்கொள்வர். ஆனால் இன்று மிலாடி நபியை ஒட்டி, அரசு விடுமுறை செவ்வாய்க்கிழமை வந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு இருக்கும் என்பதால் பூங்கா செயல்படுகிறது.
இத்தகவலை, மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங்ரவி அறிவித்துள்ளார்.