/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 19,199 கன அடியாக உயர்வு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 19,199 கன அடியாக உயர்வு
ADDED : செப் 02, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று முன்-தினம் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வ-ரத்து அதிகரித்தது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 20,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,369 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 19,199 கன அடியாக நேற்று அதிகரித்தது. வினாடிக்கு, 13,500 கன அடி நீர் காவிரியில் வெளி-யேற்றப்பட்டது. அணை நீர்மட்டம்,
115.82 அடியாக இருந்தது.