ADDED : செப் 08, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 19,618 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 18,553 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 19,000, கால்வாயில், 700 என, 19,700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
வரத்தை விட திறப்பு கூடுதலாக இருந்தது. இதனால் நேற்று முன்தினம், 116.21 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 116.12
அடியாகவும், 87.55 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 87.41 டி.எம்.சி.,யாகவும் சரிந்தது.