/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர்மட்டம் 116 அடியாக சரிவு
/
மேட்டூர் நீர்மட்டம் 116 அடியாக சரிவு
ADDED : ஆக 31, 2024 01:06 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. ஆக., 9ல் நீர்மட்டம், 119.59 அடியாக சரிந்த நிலையில் நீர்வரத்து அதிகரிக்க நடப்-பாண்டில், 2ம் முறை, 12ல் நீர்மட்டம், 120 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் திறப்பு குறைந்ததால், 21 முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்-படியாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,284 கன அடியாக இருந்த மேட்டூர் அணை
நீர்வரத்து, நீர்பிடிப்பு பகு-தியில் பெய்த மழையால் நேற்று, 5,349 கனஅடியாக சற்று அதிக-ரித்தது. பாசனத்துக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 12,000 கன-அடி நீர் வெளியேற்றிய நிலையில், வரத்தை விட திறப்பு கூடுத-லாக
உள்ளதால் நேற்று முன்தினம், 116.46 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 116.02 அடியாக சரிந்தது.