/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சேலத்தில் 47 ஆயிரம் பேர் பதிவு
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சேலத்தில் 47 ஆயிரம் பேர் பதிவு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சேலத்தில் 47 ஆயிரம் பேர் பதிவு
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சேலத்தில் 47 ஆயிரம் பேர் பதிவு
ADDED : ஜூலை 02, 2024 06:58 AM
சேலம் : சேலம் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 47 ஆயிரத்து, 27 பேர், கற்போராக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு, மே முதல் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், 49 ஆயிரத்து, 27 பேர் எழுத படிக்க தெரியாதவர்களாக கண்டறியப்பட்டு, இத்திட்-டத்தில் கற்போராக இணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆய்வுக்-கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது.
இதில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் பொன் குமார் கலந்து கொண்டு, ஒன்றியம் வாரியாக விபரங்களை கேட்டறிந்து, சேலம் மாவட்டத்தை, 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற எடுக்க வேண்-டிய நடவடிக்கை குறித்து பேசினார்.
கூட்டத்தில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்-கேற்றனர்.