/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்நிலை கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்
/
நீர்நிலை கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்
நீர்நிலை கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்
நீர்நிலை கரையோரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் தொடக்கம்
ADDED : செப் 10, 2024 07:04 AM
வீரபாண்டி: காவிரிக்கரை உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களில், ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டத்தை அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன் ஆகியோர் வீரபாண்டி கொப்பம் ஏரிக்கரையில் நேற்று தொடங்கி வைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆறு, திருமணிமுத்தாறு மற்றும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் பல்வேறு சிறப்பு-களை உடையதும், தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்-களை வளர்க்கும் வகையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேற்று சேலம் வீரபாண்டி கொப்பம் ஏரிக்கரையில் பனை விதைகளை நட்டு, ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்-டத்தை
தொடங்கி வைத்தனர்.இதில், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை ஏரிக்-கரையில் நட்டனர்.காவிரி ஆறு பாயும் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை என எட்டு மாவட்டங்-களில் ஆற்றின் கரையோரம் பனை விதைகள் நடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சேலம்
மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று வீரபாண்டி கொப்பம் ஏரிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ., ராஜேந்-திரன், மேயர் ராமச்சந்திரன், வீரபாண்டி தி.மு.க., ஒன்றிய செயலர் வெண்ணிலா சேகர், வீரபாண்டி ஒன்றிய கமிஷனர் சந்திரமலர் மற்றும் அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.