/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் டவர் அமைக்க ரயில்நகர் மக்கள் எதிர்ப்பு
/
மொபைல் டவர் அமைக்க ரயில்நகர் மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 23, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் சூரமங்கலம் ரயில்நகர் மக்கள், நேற்று, கலெக்டர் அலு-வலகத்தில் மனு அளித்தனர். அதன்பின் அவர்கள் கூறியதாவது:
ரயில்நகர், ராம்நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. குடியிருப்புக்கு மத்தியில் உள்ள காலியிடத்தில் மொபைல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனம் நடவ-டிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு ஆரம்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதையும் மீறி, டவர் அமைத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக நேரிடும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மொபைல் டவர் அமைப்பதை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.