/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.5.88 கோடி அபராதம்
/
ரயில்களில் 'ஓசி' பயணம் ரூ.5.88 கோடி அபராதம்
ADDED : ஜூலை 04, 2024 07:41 AM
சேலம், : சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில், டிக்கெட் பரிசோ-தகர்கள் அடங்கிய குழுவினர், தொடர்ந்து ஆய்வு செய்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொண்ட ஆய்வில், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 42,823 பேருக்கு, 3.62 கோடி ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 49 சதவீதம் அதிகம்.
மேலும் முறையான டிக்கெட் இன்றி பயணித்த, 36,619 பேருக்கு, 2.25 கோடி ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்-டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 169 சதவீதம் அதிகம். தவிர, கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்ற, 83 பேரிடம், 45,801 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில், 12,900 சோதனைகள் நடத்தி, 79,525 வழக்குகள் பதிவு செய்யப்-பட்டுள்ளன. 2023 ஜூன் முதல், ஏப்ரல் வரையான காலகட்-டத்தில், 3.27 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு, 5.88 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்-ளது. இது, 79 சதவீதம் அதிகரிப்பு. இதுவே, சேலம் ரயில்வே கோட்டத்தில், 3 மாதங்களில் வசூலித்த அதிகபட்ச அபராதம்.