/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்
ADDED : ஆக 19, 2024 06:07 AM
ஓமலுார்: ஓமலுார் சரபங்கா அறக்கட்டளை சார்பில், 12ம் ஆண்டாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று அதே பகுதியில் நடந்தது.இதில், ஓமலுார் ஒன்றியத்தில் உள்ள அரசு, அதன் அரசு உதவி பெறும் பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள், திறனாய்வு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்-றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்-தொகை வழங்கப்பட்டன.
உத்தமசோழபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரமேஷ், 70,000 ரூபாய் மதிப்பில், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் சாந்தி, சுரேஷ், சீனிவாசன் பங்கேற்றனர்.