ADDED : ஆக 26, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் அருகே எருமாபாளையம், நாராயண பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் துரைசாமி, 44. லாரி டிரைவர். இவ-ரது மனைவி கவிதா, 40. நேற்று முன்தினம் துரைசாமி வேலைக்கு சென்றார்.
தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு கவிதா, அருகே உள்ள மளிகை கடைக்கு பால் வாங்க, கதவை சாத்திவிட்டு பூட்டாமல் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது, கதவு திறந்திருந்-தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5 பவுன், 20,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கிச்சிப்-பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.