/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
பத்ரகாளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
பத்ரகாளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED : ஆக 20, 2024 03:15 AM
மகுடஞ்சாவடி: வேம்படிதாளத்தில் உள்ள திருவளிப்பட்டியில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:10 மணியளவில் கணபதி வழிபாடு, லஷ்மி பூஜை, நவவிநாயகர் வழிபாடு நடந்தது. நேற்று காலை, 7:00 மணியளவில் கஞ்சமலை சித்தர்கோவிலுக்கு வந்த பக்தர்கள், கிணறுகளில் நீராடி தாங்கள் கொண்டு வந்த குடங்களில், புனித தீர்த்தத்தை நிரப்பி குடங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலை சூடினர். பின், கோவில் சிவாச்சாரியார் தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்தார்.
பூஜை முடிந்ததும் தாரை, தப்பட்டை, பம்பை, உடுக்கை, அதிர்வேட்டுக்கள் முழங்க பசு, காளைகள், குதிரை முன்னே செல்ல பக்தர்கள் நடந்தவாறு தீர்த்தக்குட ஊர்வலம் சென்று, கோவிலை அடைந்தனர். நாளை காலை, 9:15 மணியளவில் கோபுர கலசங்கள் ஸ்தாபித்தல் நடைபெறும். அதனை தொடர்ந்து, 22 காலை, 10:35 முதல் 11:10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்.

