sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சூறாவளி காற்றுடன் மழை கம்பிகள் அறுந்து மின்தடை

/

சூறாவளி காற்றுடன் மழை கம்பிகள் அறுந்து மின்தடை

சூறாவளி காற்றுடன் மழை கம்பிகள் அறுந்து மின்தடை

சூறாவளி காற்றுடன் மழை கம்பிகள் அறுந்து மின்தடை


ADDED : ஆக 31, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு, 7:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அதிகளவில் காற்று வீசியபோது ஆத்துார், உடை-யார்பாளையம் சாலையில் இரும்பு கம்பி மின் கம்பியில் விழுந்-தது.

இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. தொடர்ந்து மின்-தடை செய்யப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக, 9:00

மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மின்-பாதைகளில் சீரமைப்பு பணிகளை மின்வாரியத்தினர் மேற்கொண்-டனர்.

சாய்ந்த மரம்வாழப்பாடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. வாழப்பாடி அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் மின் கம்பி மீது பனைமரம் சாய்ந்தது.

நெடுஞ்சாலைதுறையினர், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகா-ரிகள், மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை, 6:00 முதல் இரவு, 9:40 மணிவரை மின்தடையால் மக்கள்

சிரமத்துக்கு ஆளாகினர்.

போக்குவரத்து பாதிப்புஅயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டியில் உளுந்துார்-பேட்டை நெடுஞ்சாலையில் புளிய மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. அதேபோல் மேட்டுப்பட்டி தாதனுார் அருகே தேவாங்கர் காலனியில், அரூர் நெடுஞ்சாலையிலும்

புளிய மரங்கள் மின்கம்பி மீது சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகு-தியில் மாலை, 6:30 முதல் இரவு, 9:50 மணி வரை மின்தடை ஏற்-பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர், மின்வாரியத்-தினர் சீரமைப்பு பணியில்

ஈடுபட்டனர். ஏற்காட்டில், 2 மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us