/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கம்பம் நட தேர்வான மரத்துக்கு பூஜை குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
/
கம்பம் நட தேர்வான மரத்துக்கு பூஜை குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பம் நட தேர்வான மரத்துக்கு பூஜை குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பம் நட தேர்வான மரத்துக்கு பூஜை குவிந்த பக்தர்களால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா இன்று கம்பம் நடுத-லுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று ஆட்டையாம்பட்டி, காகாபாளையம் சாலை, காட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, தேர்வு செய்யப்பட்டிருந்த மரத்துக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபி ேஷகம் செய்து மலர்களால் அலங்க-ரித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதற்கு பக்தர்கள் வந்த இருசக்கர வாகனங்-களை சாலையில் நிறுத்தியதாலும், பூஜை முடிந்த பின் கூழ், அன்னதானம் வாங்க, சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களில் இருந்து வழங்கியதால் அவற்றை வாங்க குவிந்த பக்தர்களால், ஆட்டையாம்பட்டி - காகா-பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். பூஜைக்கு பின், வெட்டப்பட்ட மரத்தை ஊர்வலமாக எடுத்து வந்து ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவிலில் வைத்து செதுக்கி சீர் செய்து கம்பம் செய்யப்பட்டது. இன்று மாலை கோவிலில் நடப்பட்டு திருவிழா தொடங்குகி-றது.பூச்சாட்டுதல் விழாதாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, கம்பம் நடும்விழா கடந்த, 18ல் நடந்தது. தொடர்ந்து கோவில் அருகே உள்ள முத்துக்குமாரசாமி கோவிலில் ஆடி திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் உடம்பில் சந்தனம் பூசி, வாளுடன் முக்கிய வீதிகள் வழியே ஆடியபடி கோவிலுக்கு வந்-தனர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூச்சாட்டுதல் விழா நடந்தது. இக்கோவில் திரு-விழா வரும், 8ல் நிறைவு பெற்று அருகே உள்ள கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், 9ல் தீ மிதி விழா நடக்கும்.