/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விஷச்சாராய சாவால் இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மரண அடி கிடைக்கும்'
/
'விஷச்சாராய சாவால் இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மரண அடி கிடைக்கும்'
'விஷச்சாராய சாவால் இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மரண அடி கிடைக்கும்'
'விஷச்சாராய சாவால் இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மரண அடி கிடைக்கும்'
ADDED : ஜூலை 03, 2024 07:38 AM
ஆத்துார்: த.மா.கா.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் ஆத்துாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அதில் பங்கேற்ற மாநில பொதுச்செயலர் விடியல் சேகர், நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி உழவர் சந்தை திடலில், வரும், 14ல் த.மா.கா., சார்பில் நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழா, அரசியல் மாற்றத்துக்கான விழாவாக இருக்கும். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வரும் 4ல், விக்கிர-வாண்டி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கள்ளக்குறிச்சி சாராய சாவு சம்பவம் தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வுக்கு மரண அடி கொடுக்கும் தேர்தலாக இருக்கும். இந்த இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷன் நியாயமாக செயல்பட வேண்டும்.
முப்பெரும் சட்டத்தில் குளறுபடி இல்லை. காலத்துக்கு ஏற்ப சட்டத்திருத்தம் அவசியம். ஹிந்தியில் உள்ள சட்ட பெயரை மாற்ற வேண்டும் என, த.மா.கா., தலைவர் வாசன், மத்திய அர-சுக்கு வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில இளைஞர் அணி பொதுச்செயலர் சத்யா, நந்தகுமார், ஆத்துார் நகர தலைவர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.