sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் தொழிலாளி பலி தம்பதி படுகாயம்

/

விபத்தில் தொழிலாளி பலி தம்பதி படுகாயம்

விபத்தில் தொழிலாளி பலி தம்பதி படுகாயம்

விபத்தில் தொழிலாளி பலி தம்பதி படுகாயம்


ADDED : ஆக 26, 2024 02:56 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், சந்தைபேட்டை தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பன், 65. இவர் நேற்று, 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில், சொக்கனுாரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார். மதியம், 3:00 மணிக்கு அங்கிருந்து வீர-கனுார் நோக்கி மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்-போது சொக்கனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், 48, அவரது மனைவி சித்ரா, 46, ஆகியோரும், 'எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர்.

தென்கரையில் இரு மொபட்டுகளும் நேருக்கு நேர் மோதின. இதில், 3 பேரும் படுகா-யமடைந்த நிலையில், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்-பப்பட்டனர். அதில் கருப்பன் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவம்

ஆத்துார் அருகே கோபாலபுரத்தை சேர்ந்த, சரவணன் மகன் சுரேஷ்குமார், 28. கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு, 'பல்சர்' பைக்கில், மல்லியக்கரை நோக்கிச்சென்-றுகொண்டிருந்தார். அந்த வழியே வந்த, 'ஈச்சர்' மினி டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார், லாரியை விட்டு தப்பியோடிய டிரைவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us