தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 13, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம்:சேலம் ஜில்லா சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார்.

சம்மேளன மாநில தலைவர் வெங்கடபதி தொடங்கிவைத்து பேசுகையில், 'சரக்கு பரிவர்த்தனை மதிப்பில், 2 சதவீத தொகையை கொண்டு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நல நிதியை உருவாக்க வேண்டும். கூலி நிர்ணயிக்க, முத்தரப்பு குழு அமைக்க அரசு முன்வர வேண்டும். அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களுக்கும், இ.எஸ்.ஐ., - பி.எப்., போனஸ், அடையாள அட்டை வேண்டும்,'' என்றார்.

தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கமும் பங்கேற்றது. பின் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us