ADDED : மார் 27, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் வாலிபர் சாவு
வாழப்பாடி:வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டிபுதுாரை சேர்ந்த, கமலேசன் மகன் பவித்ரன், 29. திருமணம் ஆகாத இவர், டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்தார். நேற்று காலை, 8:40 மணிக்கு, சேலத்தில் இருந்து, 'சைன்' பைக்கில், ஹெல்மெட் அணிந்து வாழப்பாடி நோக்கி
சென்றுகொண்டிருந்தார்.மேட்டுப்பட்டி அருகே சென்றபோது, முன்புறம் சரக்கு வாகனத்தில் சென்றவர், திடீரென வாகனத்தை, அஜாக்கிரதையாக வளைத்துள்ளார். அப்போது அந்த வாகன பின்பகுதியில் இருந்த கலவை கலக்கும், 'மில்லர் மிஷின்', பவித்ரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பவித்ரன் உயிரிழந்தார். கமலேசன் புகார்படி, சரக்கு வாகன டிரைவரிடம் வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.