/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்று கட்சியினர்பா.ஜ.,வில் இணைப்பு
/
மாற்று கட்சியினர்பா.ஜ.,வில் இணைப்பு
ADDED : ஏப் 01, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாற்று கட்சியினர்பா.ஜ.,வில் இணைப்பு
நங்கவள்ளி:ஓமலுார், காமலாபுரம், நங்கவள்ளி மற்றும் வனவாசி பகுதியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 50 பேர் நேற்று, பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர். வனவாசியில் நடந்த விழாவில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, மாவட்ட தலைவர் துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்குதல், வரும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதித்தனர். நிர்வாகிகள் சண்முகம், கிருஷ்ணதேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.