ADDED : ஏப் 01, 2025 01:43 AM
நீர்மோர் பந்தல்எம்.பி., திறப்பு
ராசிபுரம்:'கோடை காலம் துவங்கி உள்ளதால், அவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக நீர்மோர் பந்தல், குடிநீர் பந்தல் திறக்க வேண்டும்' என, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, மாநிலம் முழுவதும், தி.மு.க.,வினர், நீர்மோர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன்படி, ராசிபுரம் நகர தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்தது. நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் வழங்கினார். நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.