/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சூரியம்பாளையத்தில்மக்கள் அமைதி பேரணி
/
சூரியம்பாளையத்தில்மக்கள் அமைதி பேரணி
ADDED : ஏப் 01, 2025 01:44 AM
சூரியம்பாளையத்தில்மக்கள் அமைதி பேரணி
திருச்செங்கோடு:திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 1, 7, 8, 10வது வார்டு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீரானது, சூரியம்பாளையம் குடியிருப்பு பகுதி வழியாக செல்லக்கூடாது என, வலியுறுத்தி, நேற்று திடீரென அமைதி பேரணி நடத்தினர். சூரியம்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, சட்டையம்புதுார், அண்ணாசிலை, நான்கு ரத வீதி வழியாக சென்றனர். பின், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., அலுவலகத்தில், தங்களது கோரிக்கைகளை எடுத்துக்கூறினர். இந்த பேரணியில் ஏராளமான மக்கள் திரண்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.