ADDED : ஏப் 02, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் திருடர்கள் கைது
சேலம்,:சேலம், அங்கம்மாள் காலனி, குப்தா நகரை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 38. இவர் கடந்த, 27ல், வீடு முன், 'பல்சர்' பைக்கை நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் காலை காணவில்லை. அவர் புகார்படி பள்ளப்பட்டி போலீசார் விசாரித்ததில், ஆத்துார், புதுப்பேட்டையை சேர்ந்த திருமன், 22, புதுப்பள்ளம் சஞ்சய், 20, ஆகியோர் திருடியது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர்.
மொபட் திருட்டுஅதேபோல் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் சுரேஷ், 50. கடந்த டிச., 23ல், 'ஜூபிடர்' மொபட்டை, 5 தியேட்டர் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது மொபட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

