ADDED : ஏப் 03, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுற்றுலா பயணியர்எண்ணிக்கை சரிவு
ஏற்காடு:ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடந்த, 29 முதல், நேற்று முன்தினம் வரை சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்தனர். இதனால் படகு இல்லம், அண்ணா, ஏரி, தாவரவியல் பூங்காக்கள், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், காட்சி முனை பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணியர் காணப்பட்டனர். தொடர் விடுமுறை முடிந்ததால், நேற்று சுற்றுலா பயணியர் எண்ணிக்கை சரிந்தது. ஆங்காங்கே சிலர் மட்டும் தென்பட்டனர்.