/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 01:40 AM
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பு சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பணியை ஒரு மணி நேரம் புறக்கணித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்
பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார்.
வருவாய், பேரிடர் மேலாண், நில அளவை உள்பட அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் பாதுகாப்புக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுதல்; வருவாய், பேரிடர் துறையில் அனைத்து காலி பணியிடங்களை நிரப்புதல்; பணிப்பளுவை கருதி மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்குதல்; கருணை அடிப்படை பணி நியமன உச்சவரம்பை, 25 சதவீதமாக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், வட்ட கிளை தலைவர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் ஓமலுாரில் வட்ட தலைவர் தனபால், இடைப்பாடியில் மணிகண்டன், சங்ககிரியில் ஹாஜிதா பேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.