ADDED : ஜூன் 24, 2025 01:17 AM
மகுடஞ்சாவடி, சேலம், மகுடஞ்சாவடியை சேர்ந்த தர்மலிங்கம், 79, என்பவருக்கு சேலம் - கோவை பைபாஸ் சாலையில் பூர்விக சொத்தாக, 4.5 சென்ட் நிலம் இருந்தது. இந்நிலையில் இந்த நிலத்தை வேறொருவர், மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில், தன்னை ஏமாற்றி கிரயம் செய்து விட்டார் என கூறி தர்மலிங்கம் தன் குடும்பத்துடன், நேற்று மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தார்.
இது குறித்து தர்மலிங்கம் கூறுகையில்,'' பச்சமுத்து என்பவர் கிரயம் பெற்ற சொத்து என்னுடையது; அவர் முறைகேடாக கிரயம் பெற்றுள்ளார்,'' என்றார்.
மகுடஞ்சாவடி சார் பதிவாளர் (பொ) செல்வமணி கூறுகையில், கடந்த, 1981ல், வனஜா வகையறாவுக்கு துளசிபிள்ளை தனது வாரிசு உட்பட கிரயம் அளித்துள்ளார். வனஜா இறந்த பிறகு அவரின் வாரிசு அசோக்குமார், 3ல் ஒரு பங்கு சொத்தை பச்சமுத்து என்பவருக்கு முறையான ஆவணங்களுடன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. என் மீது வீண் பழி சுமத்துகின்றனர்,'' என்றார்.