மேட்டூர், மேட்டூர் புனித விண்ணேற்பு அன்னை ஆலய பெருவிழா கடந்த, 10ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு திருப்பயணிகளுக்கான திருப்பலி, 8:00 மணிக்கு திருவிழா திருப்பலி, சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வன் ராயப்பன் தலைமையில் நடந்தது. 8:30 மணிக்கு வேண்டுதல் திருப்பலி, மேட்டூர் மறைமாவட்ட குருக்கள் சிங்கராயன் தலைமையில் நடந்தது. இரவு அன்னை தேர்பவனி தொடங்கியது. சதுரங்காடி, தினசரி சந்தை, கிழக்கு நெடுஞ்சாலை வழியே சென்ற தேர், 3 ரோடு வழியே ஆலயத்தை அடைந்தது. ஏராளமான பங்கு மக்கள் பங்கேற்றனர்.புனித ஜெயராக்கினி
ஆத்துார், ராணிப்பேட்டையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த, 6ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம், திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தனிப்பாடல், நடனம், கட்டுரைப்போட்டி, அழகான மகன் மற்றும் மகள் போட்டி, குழு நடனம் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரை, முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்து வழிபட்டனர்.