நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம், தாதகாப்பட்டி, எஸ்.ஆர்.எம்., தோட்டம், சண்முகா நகரை சேர்ந்த, சாந்தினி மகன் சஞ்சய், 13. தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த, 3ல் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பெற்றோர் கண்டித்த நிலையில், வேதனை அடைந்த சஞ்சய், வீட்டை விட்டு வெளியேறினார். திரும்பி வரவில்லை.
எங்கு தேடியும் கிடைக்காததால், சாந்தினி, நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.