/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்தமிழில் 567 பேர் வரவில்லை
/
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்தமிழில் 567 பேர் வரவில்லை
ADDED : மார் 06, 2025 01:53 AM
பிளஸ் 1 தேர்வு தொடக்கம்தமிழில் 567 பேர் வரவில்லை
சேலம்:-தமிழகம் முழுதும் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய தமிழ் தேர்வுக்கு, 18,482 மாணவர், 20,091 மாணவியர் என, 38,573 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 18,139 மாணவர், 19,867 மாணவியர் என, 38,006 பேர் எழுதினர். 343 மாணவர், 224 மாணவியர் என, 567 பேர் வரவில்லை. முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வரும், 10, 13, 17, 20, 24, 27ல் தேர்வுகள் நடக்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.