ADDED : ஆக 03, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், அம்மாபேட்டையில், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், 12 ஜோதி லிங்க தரிசன நிகழ்ச்சி கடந்த, ௩௧ல் தொடங்கியது. வரும், 5ல் முடிகிறது.
இதில், அனைத்து மக்களும் கண்டு தரிசிக்க, ஒரே இடத்தில் சோமநாத், மல்லிகார்ஜூனர், மகா காலேஸ்வர், ஓம் காரேஸ்வரர், கேதார்நாத், பீமாசங்கர், கிருஷ்ணேஷ்வர், ராமேஸ்வரம், நாகேஸ்வரர், வைத்தியநாத், திரியம்ப கேஸ்வரர், விஸ்வநாத் ஆகிய லிங்கங்களை அமைத்துள்ளனர்.
தியான அறை அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு தேவிகளின் தத்ரூபக்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.