/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி
/
கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி
கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி
கண்விழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை 1,262 ரேஷன் கடைகளில் சோதனை முயற்சி
ADDED : ஆக 08, 2024 09:08 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், 1,262 ரேஷன் கடைகளில் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன.
சேலம் மாவட்டத்தில், 1,732 ரேஷன் கடைகள் மூலம், 11 லட்சம் கார்டுதாரர்களுக்கு அத்யாவசிய பொருட்கள் வினியோகிக்-கப்படுகின்றன. இதில் முறைகேடுகளை தடுக்க பி.ஒ.எஸ்.,(பாயின்ட் ஆப் சேல்) கருவி மூலம் பொருட்கள் விற்-பனை நடந்தது. அந்த கருவியில் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்-பதன் மூலம் கார்டுக்கு உரியவர் மட்டும் ரேஷன் கடைக்கு வரு-வது உறுதி செய்யப்பட்டதால் முறைகேடு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், 'சர்வர்' பிரச்னையால் விரல்ரேகை பதிவு செய்-வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அத்-துடன் ரேஷன் கடைக்கு வர இயலாதவர்களால் பரிந்துரைக்கப்-படும் நபர்கள், ரேஷன் பொருட்களை வாங்கி செல்வதன் எண்-ணிக்கை கணிசமாக இருந்தது. 100ல், 30 கார்டுகளுக்கு பரிந்துரை கடிதம் மூலம் பொருட்கள் வினியோகம் இருந்தது. அதையும் கட்டுப்படுத்தி ரேஷன் கடை சேவையை மேம்படுத்த, கண் கரு-விழி சரிபார்ப்பை உறுதி செய்து பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது.அதன்படி சேலம் மாவட்டத்தில் முழு நேரமாக செயல்படும் 1,262 ரேஷன்கடைகளுக்கு கண் கருவிழி சரிபார்ப்பு கருவி வழங்-கப்பட்டு, கடந்த, 29 முதல் சோதனை முயற்சியாக, கருவிழியை உறுதிப்படுத்தி அதன் மூலம் பொருட்கள் விற்பனை தொடர்ந்-தது. தற்போது சில கடைகளை தவிர்த்து பெரும்பாலானவற்றில் கருவிழி சரிபார்ப்பு மூலம் ரேஷன் பொருட்கள் விற்பனை நடந்து வருகின்றன.இதுகுறித்து சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் கூறிய-தாவது: கண்விழி சரிபார்ப்பு மூலம், 10 - 15 வினாடிகளில் கார்-டுதாரர் என உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் அனைத்து முழு நேர ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலமே விற்-பனை முழுவீச்சில் நடக்கிறது. பொட்டலம் மூலம் பொருட்கள் விற்பனை தற்போது சோதனை முயற்சியாக உள்ளது. நுகர்-வோரின் வரவேற்பை பொறுத்து அதையும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.