ADDED : ஜன 05, 2025 01:54 AM
ரூ.14 லட்சத்தில்ரேஷன் கடை  திறப்பு
ராசிபுரம்:ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளாநல்லுார் டவுன் பஞ்.,ல், எம்.பி., ராஜேஸ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இந்த கடையின் திறப்பு விழா, நேற்று நடந்தது. விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார்.
மேலும், பொதுமக்களுக்கு அரிசி சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைக்கு கொண்டுவரப்பட்ட சர்க்கரை பொருட்களின் அளவு, எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  துவக்க விழாவில் கூட்டுறவு சங்க  இணைப்பதிவாளர் அருளரசு,  ஒன்றிய தலைவர் ஜெகநாதன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

