/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
155 அடி உயர மகாலட்சுமி 1,008 ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை
/
155 அடி உயர மகாலட்சுமி 1,008 ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை
155 அடி உயர மகாலட்சுமி 1,008 ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை
155 அடி உயர மகாலட்சுமி 1,008 ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை
ADDED : செப் 09, 2024 07:15 AM
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழநியாண்டவர் ஆசிரம ராஜகோபுரம் அருகே, உலகில் உயரமாக, 155 அடியில் விஸ்வரூப மகாலட்சுமி சிலை கட்டப்பட்டு வருகிறது. இதில், 50 அடி வரை தாமரை கட்டும் பணி முடிந்து, 51வது அடியில் இருந்து லட்சுமி சிலை கட்டப்பட உள்ளது. இதை முன்னிட்டு அதன் பாதத்தில், செம்பாலான, 1,008 ஸ்ரீ சக்கரம், பஞ்சலோகம், நவரத்தின கல் பதிப்பு பிரதிஷ்டை செய்யும் பணி நேற்று தொடங்கியது.
அதற்கு சிறப்பு ேஹாமம், பூஜை செய்யப்பட்டது. கிருபானந்த வாரியாரின் வாரிசான தேச மங்கையர்கரசி, ஸ்ரீசக்ர பிரதிஷ்டையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி, சக்கரத்தை பிரதிஷ்டை செய்தனர். பின் மக்கள், 1,000 பேர், அவர்கள் கரங்களால் பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தேச மங்கையர்கரசி கூறுகையில், ''உலகில் உயரமாக, 155 அடியில் விஸ்வரூப மகாலட்சுமி சிலை சேலத்தில் அமைய உள்ளது பெருமை அளிக்கிறது. இச்சிலை வரலாறு படைக்கும்,'' என்றார்.